என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னேற்பாடு பணிகள்"
- வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
- வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அவினாசி:
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. வருகிற , 25ந் தேதி காலை முருக பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து தினமும் காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், கந்தசஷ்டி பாராயணமும் நடைபெறும்.வருகிற 30ந் தேதி மாலை, முருகர் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வர சுவாமி கோவில்.காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட முருகன்கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
- பெரம்பலூர் அருகே வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- தற்போது ராஜகோபுரத்தில் ஐந்து கலசங்கள், 126 சிலைகள், பித்தளை கவசம் பொருத்திய கொடிமரம் என கோவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் கிராமத்தில் கி.பி. 1800 களில் கட்டப்பட்ட ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கால பேக்கில் சிதிலமடைந்தது. இதையடுத்து 2015-ல் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பூர்வாங்கப் பணிகளை தொடங்கினர். ஆனால் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் தடைபட்டன.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த ஊர் மக்கள் மற்றும் புனரமைப்பு குழுவினர் அம்மன் வழிகாட்டுதலின்படி பிரபல தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் உதவியை நாடினர்.
அவரும் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்த இசைவு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக 2019-ம் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி இடம் வேலைகளை ஒப்படைத்தனர்.
பொருட்செலவில் பெரும் பங்கினை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் ஏற்றுக்கொண்டார். தற்போது ராஜகோபுரத்தில் ஐந்து கலசங்கள், 126 சிலைகள், பித்தளை கவசம் பொருத்திய கொடிமரம் என கோவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டது. இங்கு மூலவராக திரவுபதியம்மன், செல்வ விநாயகர், தர்மராஜா சுவாமிகள் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் கிருஷ்ணருக்கு தனி சன்னதியும், இஸ்லாமிய அரசர்களில் ஒருவரான முக்தார் ராவுத்த–ருக்கு சிலையும் எழுப்பப் பட்டுள்ளது. கோபுரத்தில் மகாபாரத கதாபாத்திரங்களை நினைவு கூறும் தத்ரூப சிலைகள் எனக்கோவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது.
இப்போது கோவில் திருப்பணிகள் முழுமை அடைந்ததையடுத்து பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 6-ந்தேதி வளர்பிறையில் நடக்கிறது.
நூற்றாண்டை கடந்து நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக நடத்த பூலாம்பாடி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியூர், வெளிநாடுகளில் வசித்து வந்த பக்தர்கள் பூலாம்பாடி திரும்பி உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
5-ந்தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் 6-ந்தேதி (புதன்கிழமை) அன்று அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் காலை யாக பூஜை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு மகா பூர்ணாகுதி கும்பங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் நடக்கிறது.
இதையடுத்து மகா கும்பாபிஷேக விழா காலை 6.45 மணி முதல் 7.25 மணிக்குள் விமானம் ராஜகோபுரம், மூலாலய மூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூலாம்பாடி பேரூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண மின் விளக்குகளால் கோபுரம் ஜொலிக்கிறது. மேலும் யாகசாலைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த யாகசாலைகளிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்று வட்டார மக்களும் கோவிலுக்கு வர தொடங்கியுள்ளனர்.
- இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம்.
- மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஸ்ரீ மஹாராஜா மஹாலில் தனியாா் துறை சாா்பில் வருகிற 2-ந்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம். அதேபோல, கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் வங்கிக்கடன் வழங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர்.
- அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களின் தேரோட்டம் நாளை 12-ந்தேதி , நாளை மறுநாள் 13-ந்தேதி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தமிழ்செல்வன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன், மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுகாதார அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர். எனவேபாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.தேரோட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் தேர்வீதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மின்வாரியம், உரிய ஆய்வின் அடிப்படையில் மின் வினியோகத்தை மாற்றியமைக்க வேண்டும். அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல 12, 13 -ந் தேதிகளில் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்